Tuesday, June 25, 2024

பாலைக்குளி பிரீமியர் லீக் சுற்றுப் போட்டி

 மன்/ பாலைக்குளி மண்ணில் 2024/06/21 அன்று அல் அமீன் விளையாட்டு கழகத்தினால் பாலைக்குளி பிரீமியர் லீக் சுற்றுப் போட்டி பள்ளி பரிபாலன சபை மற்றும் ஊர் பெரியவர்களால் இனிதே ஆரம்பிக்கப்பட்டது...

 AL AMEEN SPORTS CLUB

படஙகள் இணைப்பு.

Saturday, March 5, 2022

பாலாக்குழி அறிமுகம்.

பாலைக்குளி என்பது இலங்கையின் வடக்கே மன்னார் மாவட்டத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமம். இது மன்னார், புத்தளம் மாவட்டத்தின் எல்லையோரக் கிராமமாகும். இதன் வடக்கே கொண்டச்சியும் கிழக்கே வியாயடி குளமும், வில்பத்து சரணாலயமும் அமைந்துள்ளன. தெற்கே மறிச்சிக்கட்டியும், ஊர்கமமும் அமைந்துள்ளன. அதன் மேற்கே மன்னார் – புத்தளம் வீதியும் உள்ளது.

Tuesday, January 15, 2019

அல்ஹிக்மா பாலர் பாடசாலையின் இறுதி வருட மாணவர்களை வெளியேற்றும் நிகழ்வு.

முசலி தெற்கின் அமைந்துள்ள பாலைக்குழி கிராமத்தில் அமைந்துள்ள அல்ஹிக்மா பாலர் பாடசாலையில் 2018ம் ஆண்டில் கல்வி கற்ற  மாணவர்களுக்கான கெளரவித்தலும், 2019ம் ஆண்டுக்கான புதிய மாணவர்கள் அறிமுகம்

Wednesday, July 25, 2018

பாலைக்குழிக்கு செல்லும் பிரதான பாதைக்கான பெயர் பலகையினை நாட்டப்பட்டது.

மறிச்சிக்கட்டியில் இருந்து பாலைக்குழிக்கு செல்லும் பிரதான பாதைக்கான பெயர் பலகையினை நல்லாட்சிக்கான தேசிய முன்னனியின் முசலி பிரதேச சபை உறுப்பினர் சேகு சுல்தான் ஜெமீல் தனது சொந்த நிதியிலிந்து அவர்களால் நேற்று (25/07/2018) அன்று நாட்டி வைக்கப்பட்டது இந்நிகழ்வில் பாலைக்குழி மஸ்ஜிதுல் ஹைராத் பெரிய பள்ளி தலைவர் முஸ்தபா முஹாசிம் மற்றும் முன்னால் முசலி பிரதேச சபை உறுப்பினர் ஹமீதுமரைக்கார் காமில் ஆகியோர் கலந்துகொண்டனர். (படஙகள் இணைப்பு )

Friday, May 6, 2016

ஆசிரியர் றயீஸ் அவர்களுக்கு எமது மனப்புபூர்வ நன்றிகள்.

சலீம் பைரூஸ்.

மறிச்சிக்கட்டி அல் ஜாசிம் பாடசாலையில் இருந்து சிலாவத்துரை பாடசாலைக்கு இடமாற்றப்பட்ட ஆசிரியர் றயீஸ் அவர்களுக்கு எமது மனப்புபூர்வ நன்றிகள்.
மறிச்சிக்கட்டியின் கல்வி வழச்சிக்கு பெறும் பங்காற்றியதை நன்றி

Monday, May 2, 2016

பாலைகுளி மாணவர்களின் கல்வி

மன்னார் மாவட்ட முசலி பிரதேசத்தின் மறிச்சுக்கட்டியில் அமைந்துள்ள பாலைக்குளி என்னும் கிராமத்தின் ஆரம்ப பாடசாலை 125மாணவர்களுடன். ஒரே ஒரு கட்டிடத்தில் இயங்கி வருதால் மாணவர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக அப்பாடசாலையில் கல்விகற்கும் மாணவர்களின் பெற்றோர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்

Saturday, February 20, 2016

ஒன்பது மாகாண சபைகளின் முதலமைச்சர்களுக்கான ஒன்றுகூடல்

ஒன்பது மாகாண  சபைகளின் முதலமைச்சர்களுக்கான ஒன்றுகூடல் நேற்று மத்திய மாகாண முதலமைச்சர்  சரத் ஏக்க நாயக்க தலைமையில் கண்டி ஒக்ரே ரேஜன்ஷி ஹோட்டலில் நடை பெற்றது .

இக்கலந்துந்துரயாடலுக்கு  கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட்டும் கலந்து கொண்டு கல்வி தொடர்பான முன்னேற்ற விடயங்களை சுட்டிக்காட்டி அதற்கான வழிகளை எவ்வாறு செய்வது தொடர்பாகவும் விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டது .

பலஸ்தீன் மஸ்ஜிதுல் இப்றாஹிம் என்ற பிரதேசத்தில் வைத்து இஸ்ரேலி கொடிய மிருகங்களால் கைது செய்யப்பட்ட 13 வயது சிறுவன் .

2016. 02 . 20. இன்று பலஸ்தீன் மஸ்ஜிதுல் இப்றாஹிம் என்ற பிரதேசத்தில் வைத்து இஸ்ரேலி கொடிய மிருகங்களால் கைது செய்யப்பட்ட 13 வயது சிறுவன் .

இஸ்ரேலிய மிருகங்கள் இப்படியான  சிறுவர்களையும் இளைஞர்களையும்  வீடுகள் புகுந்து கைதுசெய்து வருவதாக சில ஊடகங்கள் கருத்து தெரிவித்fதுள்ளது .

Whatsapp அறிமுகப்படுத்தும் புதிய வசதி!


உலகமெங்கும் Whatsapp பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சமீபத்தில் அந்த எண்ணிக்கை 100 கோடியை தாண்டியது. பெரும்பாலும், Smartphone பயன்படுத்துபவர்களே Whatsapp ஐ அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
அதுவும் நண்பர்கள் ஒன்று சேர்ந்து ஏராளமன  குரூப்களை உருவாக்கி அதில் தங்களுடைய கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.முக்கியமாக, இந்தியாவில்தான் அதிமான குழுக்கள் Whatsapp இல் செயல்படுவதாகவும், ஏராளமான புகைப்படங்கள் Share செய்யப்படுவதாகவும் Whatsapp ஐ உருவாக்கியவர்களில் ஒருவரான ஜான் கவோம் கூறியுள்ளார்.