Tuesday, January 15, 2019

அல்ஹிக்மா பாலர் பாடசாலையின் இறுதி வருட மாணவர்களை வெளியேற்றும் நிகழ்வு.

முசலி தெற்கின் அமைந்துள்ள பாலைக்குழி கிராமத்தில் அமைந்துள்ள அல்ஹிக்மா பாலர் பாடசாலையில் 2018ம் ஆண்டில் கல்வி கற்ற  மாணவர்களுக்கான கெளரவித்தலும், 2019ம் ஆண்டுக்கான புதிய மாணவர்கள் அறிமுகம்
கலைநிகழ்ச்சி மற்றும் பரிசளிப்பு நிகழ்வும் (15/01/2019) நேற்று மன்/பாலைக்குழி GMMV யில் பாலர் பாடசாலை பெற்றோர் கொமிட்டி தலைமையில் நடைபெற்றது
இந்நிகழ்வில் அதிதிகளாக
நல்லாட்ச்சிக்கான தேசிய முன்னணி யின் முசலி பிரதேச சபை உறுப்பினர் சேகுசுல்தான் ஜெமீல் , பாலைக்குழி பாடசாலையின் அதிபரும், "YMMA முசலி தெற்கு "வின் தலைவருமான ஹம்தூன் முஹம்மது முப்தி, "பாலைக்குழி அபிவிருத்தி நிதியத்தின் (PDF)" தவிசாளர் சேகுசுல்தான் ஹகீம் மறிச்சிக்கட்டி அல்ஜாசிம் பாடசாலையின் அதிபர் சாபிமரைக்கார் "பாலைக்குழி கிராம அபிவிருத்தி சங்கத்தின் (RDS)" தலைவர் மீராசாஹிப் முஹம்மது ஹாரிஸ், பள்ளி அபிவிருத்தி குழு தலைவர் அஹமது கபீர், பாலைக்குழி பாடசாலை ஆசிரியர் அப்துல் சமது முஹம்மது நஜீப், பாலர் பாடசாலை நிர்வாகக் குழு தலைவர் நாகுரான் இஸ்மத் ஆகியோர் கழந்து சிறப்பித்ததுடன், மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றதோடு, மாணவர்களுக்கு சிறு அன்பளிப்புக்களும் பகிரப்பட்டன.