Monday, May 2, 2016

பாலைகுளி மாணவர்களின் கல்வி

மன்னார் மாவட்ட முசலி பிரதேசத்தின் மறிச்சுக்கட்டியில் அமைந்துள்ள பாலைக்குளி என்னும் கிராமத்தின் ஆரம்ப பாடசாலை 125மாணவர்களுடன். ஒரே ஒரு கட்டிடத்தில் இயங்கி வருதால் மாணவர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக அப்பாடசாலையில் கல்விகற்கும் மாணவர்களின் பெற்றோர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்

குறித்த கட்டிடத்தில் மூன்று வகுப்புக்கள் மாத்திரமே நடத்தக்கூடிய இட வசதி காணப்படுவதால் . ஏனைய இரண்டு வகுப்புக்களும் பாடசாலை வளாகத்திலுள்ள மரத்தடியில் இயங்கி வருவதாக பெற்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பாடசாலை மழை காலங்களில் மரத்தடியில் நடாத்த முடியாமல் கட்டிடத்திற்குள் ஏனைய இரண்டு வகுப்பு மாணவர்களையும் நுழைப்பதால் ஏனைய மாணவர்களின் கல்வி செயற்பபாடுகளும் பாதிக்கப்படுகிறது.
பாலைக்குளி மாணவர்களின் கல்வி அடிப்படையல் ஒரு கட்டிடமின்மையால் அழிக்கப்படுவது கவலைக்குரியது என்பதுடன் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியது உரியவர்களின் கடமையல்லவா?