Sunday, January 11, 2015

மேல் மாகாணத்தில் ஆட்சி மாற்றம்?

party changeமேல் மாகாண சபையிலுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் குழுவொன்று தன்னுடன் பேச்சுவார்த்தை நடாத்தியதாகவும் புதிய அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கி மேல் மாகாண சபையில் ஆட்சி மாற்றமொன்றுக்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அம்மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் மஞ்சு ஸ்ரீ அரங்கல தெரிவித்துள்ளார்.
இதற்கேற்ப, உறுப்பினர்களின் கையொப்பங்கள் பெறப்பட்டு மேல் மாகாண ஆளுனர் அலவி மவ்லானாவிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும், அடுத்த சில தினங்களில் மாகாண சபையில் பெரும்பான்மைப் பலத்தைக் காட்டவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.