Sunday, January 11, 2015

சிரேஷ்ட ஊடகவியலாளர் மீரா இஸ்ஸதீனின் சுகவாழ்வுக்காக பிரார்த்திக்குமாறு வேண்டுகோள்



சுகவீனமுற்ற நிலையில் கொழும்பிலுள்ள தனியார் வைத்திசாலையில் சிகிச்சை பெற்றுவரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் சிரேஷ்ட அங்கத்தவர் மீரா இஸ்ஸதீனின் சுகவாழ்வுக்காக பிரார்த்திக்குமாறு போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மீடியா போரத்தின் முன்னாள் பொருளாளராகவும் உப தலைவராகவும் செயற்பட்டுள்ள இவர், அம்பாறை மாவட்ட பிராந்திய செய்தியாளராக பல்வேறு ஊடகங்களுக்கும் பணியாற்றி வருகிறார்.
அத்துடன் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவராகவும் விளங்குகிறார்.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் மீரா இஸ்ஸதீனை மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் மற்றும் செயலாளர் றிப்தி அலி ஆகியோர் நேரில் சென்று இன்று மாலை பார்வையிட்டனர்.
இதனையடுத்தே சிரேஷ்ட ஊடகவியலாளர் மீரா இஸ்ஸதீனின் சுகவாழ்வுக்காக பிரார்த்திக்குமாறு ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.