சலீம் பைரூஸ் பாலைக்குளி

1.
சமூகத்தின் பொருளாதாரம் :- ஒரு சமுகத்தின் பொருளாதாரம் எந்த
அளவு உயர்வு பெறுகிறதோ அதன் போது சமூகம் உயர்வை நோக்கி நகரத் தொடங்கும்.
2.
சமூகத்தின் கல்வி :-
ஒரு சமுகத்தின் பொருளாதாரம் எந்த அளவு உயர்வு பெற்றிருந்த போதிலும், கல்வியில்
வீழ்ச்சி காணுவார்களாயின் அவர்களது பொருளாதாரத்தை நிருவகிக்க முடியாத நிலை
ஏற்பட்டு பொருளாதாரத்திலும் வீழ்ச்சி ஏற்படலாம்.
3.
சமூகத்தின் பண்பாடு (ஆன்மீகம்) :- சமூகத்தின் கல்வி மற்றும்
பொருளாதாரம் எவ்வளவுதான் வளர்ச்சி அடைந்தாலும் அச் சமூகத்தின் ஆன்மீக பண்பாடுகள்
வீழ்ச்சி அடைகின்ற போது ஏனைய விடயங்களில் வீழ்ச்சியை கானக்கூடியதாக இருக்கும்.
ஒரு சமூக
வளர்ச்சியில் அல்லது விருத்தியில் பிரதானமாக பங்களிப்பு செலுத்தும் இம் மூன்று
காரணிகளும் ஒன்றை விட்டு ஒன்று தனியாக வளர்ச்சி அடைகின்ற போது சமூகத்தின் பூரண
விருத்தியை அடைய முடியாமல் இருக்கும். ஆகவே என் அன்பின் சகோதரர்களே எமது
பாலைக்குளி சமூகத்தின் முன்னேற்றம் குறித்து
சிந்திக்கின்ற போது இம் மூன்றிலும் விருத்தி ஏற்படுத்த வேண்டிய தேவை உள்ளதை
உணரக்கூடியதாக இருக்கின்றது.
நன்றி
சலீம் பைரூஸ் பாலைக்குளி