இனாமுல்லாஹ் மசிஹுதீன.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மற்றும் தவிசாளர் இருவரும் சமர்ப்பித்துள்ள இராஜினாமா கடிதங்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
இருவரும் அதிபர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை அண்மைக்கால அரசியல் வரலாறு கண்ட
உன்னத தலைவராக குறிப்பிட்டுள்ளதோடு, தமக்கு அமைச்சுப் பதவிகளை தந்து பூரண
ஒத்துழைப்பையும் வழங்கியமைக்கு நன்றியுணர்வை வெளிப்படுத்தியுமுள்ளனர்.
அதேவேளை நாட்டை பயங்கர வாதத்தில் இருந்து விடுவித்து அபிவிருத்திப் பாதையில் இட்டுச் சென்ற தலைவர் எனவும் குறிப்பிட்டுள்ளனர், பசுமையான அந்த உறவுகளை என்றும் மறப்பதில்லை என்றும் கூறியுள்ளனர்.
கட்சி முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் என பலரது அழுத்தத்தின் காரணமாகவே இருவரும் இராஜினாமா செய்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
பஷீர் சேகு தாவூத் வர்களைப் பொறுத்தவரை ஜனாதிபதி மஹிந்த நடை பெரும் தேர்தலில் அதிவிஷேட வெற்றியை ஈட்ட வாழ்த்தியிருப்பதோடு, ஜனாதிபதியிற்கு எதிராக எந்தவித தேர்தல் நடவடிக்கைகளிலும் ஈடுபடப் போவதில்லை என குறிப்பிட்டு தன்னை நன்றி கெட்டவன் என கருத வேண்டாம் வினயமாக வேண்டிக் கொண்டுள்ளார்.
கட்சின் முடிவுக்கு கட்டுப்பட்டும், மக்கள் தன்னை பதவி ஆசை பிடித்த துரோகி என கூறாதிருப்பதற்கும், மாத்திரமன்றி தன்னால் பாரிய அளவில் தேர்தலில் மகிந்தவின் வெற்றியிற்கு பங்களிப்பு செய்ய முடியாமை கருதியும் பதவியில் இருந்து விலகுவதாகவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு பின்னர் இந்த நாட்டு மக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் நீங்களே பாதுகாவலர் என தான் நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையில் அதிபர் மஹிந்த ராஜபக்ஷ குறித்த தனிப்பட்ட சாதகாமான அம்சங்கள் பல இருக்கின்றன, தனிப்பட்ட முறையில் நன்றிக் கடன்பட்ட சிலருக்கு பதவிகள் கிடைத்ததை தவிர...
போருக்குப் பின்னரான இலங்கையில் முஸ்லிம்காங்கிராஸ் சமூகத்திற்காக முன்வைத்த கோரிக்கைகள் சகலவும் புறக்கனிக்கப்பட்ட நிலையில், அசுர வேகத்தில் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் இலக்கு வைக்கின்ற இன மத வெறி காழ்ப்புணர்வு வன்முறை பிரகுசாரங்கள் கெடுபிடிகள் முடுக்கி விடப்பட்ட நிலையிலேயே முஸ்லிம் சமூகத்தின் பொது சன அபிப்பிராயம் வேறுபட்டது.
முஸ்லிம் சமூகத்திற்கு அதிபர் ராஜபக்ஷவுடன் தனிப்பட்ட கோபதாபங்கள் இல்லை ஹலால் முதல் அளுத்கமை வரை முஸ்லிம் சமூகம் மீது திணிக்கப்பட்ட கசப்பான அரசியல் பாடங்களின் பிரதிபலன்களே இன்று பிரதிபலிக்கின்றன.
தமது கட்சியின் கூட்டு முடிவினை சிறுமைப்படுத்தியும், மஷூரா முறையிற்கு மாற்றமாகவும், முஸ்லிம் சமூகத்தின் ஆதங்கங்களுக்கு நோவினை செய்யும் வகையிலும் இவர்கள் இருவரும் இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டமை ஒருவகையில் நயவஞ்சகத்தனமான காட்டிக் கொடுப்பாகும்.
அந்த வகையில் தமது பக்க நியாயங்களை தெளிவாக வெளியே சொல்லி அதிபர் ராஜபக்ஷவுடன் இருக்கும் அளவி மௌலானா ,பௌசி,அஸ்வர், ஹிஸ்புல்லாஹ், அதாவுல்லாஹ் போன்றவர்கள் விமர்சனங்களுக்கு அப்பாலும் ஒரு படி உயர்ந்து நிற்கின்றார்கள் என கருதுகின்றேன்.
கட்சின் ஒழுக்கக் கோவையின் படி தலைவர் தவிசாளர் இருவருக்கும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும், கட்சியின் தலைவர் தவிசாளர் உற்பட முக்கியஸ்தர்கள் கட்சியினதும் சமூகத்தினதும் பேச்சாளர்கள் அன்றி சொந்த அபிலாஷைகளின் பேச்சாளர்களாக செயற்பட முடியாது.
உண்மையில் கட்சியின் முடிவுக்கு கட்டுப்பட்டு இராஜினாமா செய்வதாக தெரிவித்து,கடந்தகாலத்தில் அமைச்சுப் பதவிகளை வழங்கியமைக்கு நன்றி தெரிவிப்பதோடு, கட்சியும் முஸ்லிம் சமூகமும் இவாறான முடிவுகளுக்கு வரக் காரணமான விவகாரங்களை கவலையோடு தொட்டுக் காட்டியிருந்தால் அது சாணக்கியமான வரலாற்று ஆவணமாகும்.
மேற்படி இருவர் மீதும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுப்பதற்கான விளக்கம் கோரல் கடிதங்களை அனுப்ப வேண்டாம் என்றும், களநிலவரங்களை கருத்தில் கொண்டு இருவருக்கும் மன்னிப்பளிக்குமாரும் கோரும் அதேவேளை...
கட்சியின் பொதுச் செயலாளர் ஹசனலி அவர்கள் தேசத்தின் முன் தெளிவான உத்தியோக பூர்வமான அறிக்கை ஒன்றை அவசரமாக வெளியிடுமாறும் பணிவன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.