Tuesday, December 23, 2014

எம்.எம்.சுஹைர் தலைமையில் மைத்திரியின் பொதுக்கூட்டம்

photo 2ஜனாதிபதி சட்டத்தரணியும், தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான எம்.எம்.சுஹைர் தலைமையில், பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து நாளை (25) கொழும்பில் பொதுக் கூட்டமொன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு, டீ.ஆர்.விஜேவர்தன மாவத்தையில் (லேக் ஹவுஸுக்கு முன்பாக) அமைந்துள்ள கண்காட்சி மைய கேட்போர் கூடத்தில் நாளை காலை 9.30 மணிக்கு இக்கூட்டம் ஆரம்பமாகிறது.
இந்த பொதுகூட்டத்தில் மைத்திரிபால சிறிசேனா, கருஜயசூரிய, ராஜித சேனாரத்ன, ரவி கருணாநாயக, கபீர் காஸிம், மேயர் முஸம்மில், முஜிபுர் ரஹ்மான், அஸாத் சாலி உட்பட எதிரணியின் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

Screen Shot 2014-12-24 at 8.13.50 AM