ரூசி சனூன் புத்தளம்
வடக்கு முஸ்லிம்களின் நலன்களுக்கான அமைப்பு இந்த அமைதி போராட்ட நிகழ்வுதனை ஏற்பாடு செய்திருந்தன.
பல்வேறு சுலோகங்கள் கொண்ட பதாதைகளை ஏந்தியவாறு புத்தளம் மாவட்டத்தில் வதியும் வடமாகாண முஸ்லிம்கள் பலர் இதில் கலந்து கொண்டனர்.
மூன்று அம்சக்கோரிக்கைகள் இந்த
போராட்டத்தின் போது முன்வைக்கப்பட்டன. 1990 ம் ஆண்டு வடக்கிலிருந்து
முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமையை விசாரிப்பதற்கென ஜனாதிபதி
ஆணைக்குழு நியமிக்கப்படவேண்டும். வடக்கு முஸ்லிம்கள் தமது தாயக பூமியில்
சுதந்திரமாக வாழ வழி வகுக்கப்பட வேண்டும். வட மாகாண அரச நியமனங்கள்
முஸ்லிம்களுக்கும் பாகுபாடின்றி வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கைகளே அங்கு
முன்வைக்கப்பட்டன.