Thursday, October 23, 2014

முஸ்லிம் காங்கிரஸ் தவறினால் பாராளுமன்றத் தேர்தலில் புது முகங்கள் – இனாமுல்லா

inamullah
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் தவறுவிடுமானால் அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் புது முகங்கள் முஸ்லிம்கள் சார்பாக பாராளுமன்றம் செல்வார்கள் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீமிடம்  தேசிய சூரா கவுன்ஸில் உறுப்பிர் அஷ்ஷெய்க் மஸீஹுத்தீன் இனாமுல்லா தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் காங்கிராஸ் எந்தவொரு ஆளும் அல்லது எதிர்க் கட்சியின் நிரந்தர பங்காளியாக இருக்க முடியாது.  நீங்கள் சோபித தேரர், அனுர குமார, ரணில், சந்திரிக்கா உற்பட ஏனைய பிரமுகர்களுடனும் பரந்துபட்ட கலந்துரையாடலில் ஈடுபடல் வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை ஆதரிக்க உடன்பட்டுள்ளதாகவும் பிரதி உபகாரமாக அமைச்சு, பிரதி அமைச்சு மற்றும் வெவ்வேறு பதவிகள் பலருக்கும் கிடைக்க இருப்பதாகவும் வலைதள ஊடகங்களில் வெளியாகிய செய்திகள் குறித்து அமைச்சர் ஹகீமிடம் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த நான்கு வருடங்களாக முஸ்லிம்களுக்கு எதிராக அடாவடித்தனங்களைக் கட்டவித்து விட்டு தமது உயிரிலும் மேலான சன்மார்க்க விழுமியங்களில் பாரம்பரியங்களில் கை வைத்து ஹலால் முதல் அழுத்கமை வரை முஸ்லிம் சமூகத்திற்கு கொள்ளி வைத்தது மாத்திரமன்றி போதாக்குறைக்கு ரோஹிங்கிய முஸ்லிம்களை கொத்துக் கொத்தாக பல்லாயிரக் கணக்கில் கொன்று குவித்த கும்பல் நாயகன் அஸின் விராது அவர்களை அழைத்து வந்து அரங்கேற்றி, எதிர்காலத்தில் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான தமது நிகழ்ச்சி நிரலை அமபலப்படுத்திய பொது பல சேனா அறிமுகப்படுத்தவுள்ள கதாநாயகனை முஸ்லிம்கள் ஒரு போதும் ஆதரிக்க முடியாது.
சுகததாஸ உள்ளரங்கில் செப்டம்பர் மாதம் 28 ஆம் திகதி சங்க மாநாடு நாடத்திய பொதுபல சேனா மியன்மார் அஸின் விராதுவை விஷேட அதிதியாக அமர்த்தி இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான தமது எதிர்கால இலக்குகளை பகிரங்கப்படுத்தியதொடு அவற்றிற்கு துணை நிற்கும் ஒரு ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க நாடு தழுவிய பௌத்த மதவழி பாட்டு தளங்களூடாக ஐம்பது இலட்சம் வாக்காளர்களை திரட்டவுள்ளதாக பகிரங்கமாகவே அறிவித்துள்ளதால் முஸ்லிம்களது தெரிவு மிகவும் பாரதூரமானதாகும். பதிவி பட்டங்களோடும் ஒரு சில அரசியல் அபிலாஷைகளோடும் மட்டுப்பட முடியாது.
ஸ்ரீ.ல.மு.கா. தவறும்பட்சத்தில் எதிர்வரும் ஏப்ரலில் இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் புதிய முகங்கள் முஸ்லிம்கள் சார்பாக பாராளுமன்றம் செல்வார்கள். அதற்கான ஒரு அணி நாடுதழுவிய மட்டத்தில் தயாராகிக் கொண்டிருப்பதாகவும் தான் அமைச்சர் ரவுப் ஹக்கீமிடம் தெரிவத்துள்ளதாக தனது முகநூலில் மஸீஹுத்தீன் இனாமுல்லா குறிப்பிட்டுள்ளார்.