மூத்த ஊடகவியலாளரும்
ஓய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளருமான கலாபூஷணம் அல் -ஹாஜ் அலியார் முஸம்மிலின் மறைவு ஊடகத்துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த இவர் புனித ஹஜ் கடமைக்காக இன்றைய தினம்
மக்கா நோக்கி பயணமாகவிருந்தார். இதன்பொருட்டு கொழும்பில் தங்கியிருந்த
நிலையில் சுகவீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதே மரணம்
சம்பவித்துள்ளது.
புனித கடமையை நிறைவேற்றும் அவரது நோக்கம் நிறைவேறாது போயினும் அல்லாஹ் அவரது தூய எண்ணத்தை அங்கீகரித்து ஜென்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனபதியை அருள வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் பிரார்த்திக்கிறது.
தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் பாண்டித்தியம் பெற்றிருந்த இவர் நாட்டின் தேசிய ஊடகங்கள் பலவற்றிலும் செய்தியாளராகக் கடமையாற்றியதன் மூலம் கல்முனை பிரதேச மக்களின் செய்திகளை வெளிக் கொணர்ந்தார். குறிப்பாக திவயின பத்திரிகையின் பிராந்திய செய்தியாளராக செயற்பட்ட இவர் சிங்கள மொழி மூலம் முஸ்லிம்களின் பிரச்சினைகளை வெளிக் கொண்டுவருவதில் பெரும் பங்காற்றினார்.
அத்துடன் இவர் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் முன்னாள் ஆசிரியராகவும் மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலய முன்னாள் அதிபராகவும் , சாய்ந்தமருது மத்தியஸதர் சபையின் முன்னாள் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார். இதற்கப்பால் சமூக சேவையாளராகவும் , கவிஞராகவும் , எழுத்தாளராகவும் , மொழிபெயர்ப்பாளராகவும் பல துறைகளில் கால் பதித்திருந்தார்.
இவர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் சிரேஷ்ட உறுப்பினருமாவார்.
அன்னாரின் இழப்பு ஊடகத்துறைக்கும் சாய்ந்தமருது பிரதேசத்திற்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும் எனவும் முஸ்லிம் மீடியா போரம் தனது அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளது.