Wednesday, May 21, 2014

புனித ரமழானுக்கு முன்னர் உள்ளூர் மற்றும் மாவட்ட ஷூரா சபைகள் அமைவது அவசியம்..!

புனித ரமழானுக்கு முன்னர் உள்ளூர் மற்றும் மாவட்ட ஷூரா சபைகள் அமைவது அவசியம்..!

ஒவ்வொரு முஸ்லிம் ஊரிலும் அவ்வப்பிரதேசங்களில் உள்ள பள்ளிவாயல் நிர்வாகத்தினர் உலமாக்கள், புத்திஜீவிகள், வர்த்தகசமூகத்தினர், அரசியல் பிரமுகர்கள், இளைஞர்கள், இஸ்லாமிய இயக்கங்களின் தரீக்காக்களின் பிரதிநிதிக,ள், பாடசாலை சமூகத்தினர் என சகல தரப்புக்களையும் கொண்ட ஷூரா சபைகளை அவசரமும் அவசியமுமாக (அடுத்த ஜும்மாவிற்கு முன்னர்) தோற்றுவித்துக் கொள்ளல் வேண்டும்.குறைந்த பட்ச்சம் புனித ரமழானுக்கு முன்னர் உள்ளூர் மற்றும் மாவட்ட ஷூரா சபைகள் அமைவது அவசியம்..!

பிரச்சினைகள் ஏற்படும்பொழுது சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்தும் காவல் துறையினரை, சட்ட மற்றும் நீதித் துறையினரை அணுகுதல், பிராந்தியத்தில் உள்ள முஸ்லிம் முஸ்லிம் அல்லாத அரசியல் தலைமைகளை அணுகுதல் போன்ற இன்னோரன்ன விவகாரங்களை நிதானமாக கலந்தாலோசித்து உகந்த நடவடிக்கைகளை அவ்வப்போது மேற்கொள்தல் அவசியமானதாகும்.
குறிப்பாக சட்டம் ஒழுங்கு நீதித்துறை என்று வரும்பொழுது சட்டத்தரணிகளின் சேவைகளை பெற்றுக்கொள்தல் அதேபோன்று இன்னோரன்ன நடவடிக்கைகளுக்கான செலவினங்களை எதிர்கொள்வதற்கான நிதியம் ஒன்றும் ஏற்படுத்திக் கொல்லப் படல் வேண்டும்.
தேசிய அளவில் இஸ்லாமிய அமைப்புக்கள் தரீக்காக்கள் முஸ்லிம் புத்திஜீவிகள்,சமூக ஆர்வலர்கள் பல்கலைக் கழக சமூகத்தினர துறைசார் நிபுணர்களைக் கொண்ட தேசிய ஷூரா சபை அமையப் பெற்றிருந்தாலும் கிராம மட்ட,மாவட்ட மட்ட ஷூரா சபைகளை தோற்றுவித்து தேசிய வலையமைப்பை உருவாக்கிக் கொள்வதும் சமூக விவகாரங்களை சகல் தரப்பினரும் ஒன்றிணைந்து கையாள்வதற்கும் சகலரும் பார்வையாளர்களாக, விமர்சகர்களாக அன்றி பங்காளிகளாக மாறுதல் வேண்டும்.
வேற்றுமைகளுக்கு மத்தியிலும் சமூகத்தின் இருப்பு பாதுகாப்பு உரிமைகள் விடயத்திலும் தேசிய ஒருமைப்பாட்டிலும் சமாதான
சகவாழ்விலும் எமது கூட்டுப் பொறுப்பை உணர்ந்து நாம் அனைவரும் கடமை உணர்வுடன் செயற்படல் வேண்டும்.
வெளிநாடுகளில் வசிப்போர்,புலம் பெயர் சமூகத்தினர் சகலரும் தத்தமது பிரதேசங்களிலும் தேசிய அளவிலும் மேற்கொள்ளப் படுகின்ற முயற்சிகளுக்கு பூரண ஒத்துழைப்பையும் உதவிகளையும் வழங்குதல் வேண்டும். உள்நாட்டு சிவில் சன்மார்க்க அரசியல் தலைமைகளை கலந்தாலோசித்த பின்னரே அவர்கள் தமது செயற்பாடுகளை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.
தேசிய ஷூரா சபையின் செயற்பாடுகளில் இஸ்தாபக உறுப்பினர் என்ற வகையில் முழுமையாக ஈடுபடுவதோடு அரசியல் சிவில் மற்றும் சன்மார்க்கத் தலைமைகளோடு என்னால் இயன்றதை இயன்றவரை செய்துகொண்டிருக்கின்றேன் என்பதனையும் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றேன், எனது பதிவுகளை முகநூலோடு மட்டுப்படுத்தப்பட்ட பதிவுகளாக கருதி பின்னூட்டங்களோடு மாத்திரம் நின்று விடாதீர்கள் என்று மிகவும் அன்போடும் பணிவோடும் வேண்டிக் கொள்கின்றேன்.
பெரும்பான்மை சமூகத்தில் உள்ள பெரும்பானமையான நல்ல சக்திகள்,முற்போக்கு அரசியல் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுடன் இணைந்து தேசிய விவகாரமாகவே இந்த விவகாரங்களை நாம் சமயோசிதமாகவும் சாணக்கியமாகவும் கையாள வேண்டிய கடப்பாட்டில் இருக்கின்றோம் என்பதனை எல்லா மட்டங்களிலும் நாம் உணர்ந்து செயற்படல் அவசியமாகு