
மன்னார் முசலிப்பற்று பிதேசத்தில் தமது ஆரம்பக்குடியாக கொண்ட இந்த பணிக்க முஸ்லிம்களின் வீரத்தையும் அவர்களின் தொழில் முறைமையும் விவரிக்கும் இந்தக்கட்டுரை ,முசலியில் இருந்தே ஆரம்ப காலங்களில் மன்னர்களுக்கு யானை பிடித்தனுப்பப்பட்டதாக சொல்கிறது .அதே போன்று கண்டி தலதா மாளிகைக்கான “ராஜா” யானை வழமையாக முசலியில் இருந்தே பெறப்படுவதுண்டு .முசலி முஸ்லிம்களால் அன்பளிப்புச் செய்யப்பட்ட “ராஜ “ யானைகள் பற்றி கண்டி தலதா மாளிகையில் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் முசலியின் பெருமையை இந்தக்கட்டுரை பறைசாற்றி நிற்கிறது.அனைவரும் படிக்க வேண்டிய அருமையான தொகுப்பு ..
நன்றி . A.R.ஜெஸ்மில்