Saturday, October 26, 2013

நல்லாட்சியை ஏற்படுத்த தேசிய அரசியலிலும் பங்கெடுப்போம்: நஜா

FJPயின் தலைவர் நஜா முஹம்மத்:வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் புரிந்துணர்வு உடன் படிக்கையின் அடிப்படையில் இணைந்து மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளைப் பெற்ற ஓர் அமைப்பு நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைமையிலான அரசியல் கூட்டணி (நல்லாட்சிக்கான மக்கள் இயக்கமும் நீதிக்கும் சமாதானத் திற்குமான முன்னணி FJP இணைந்த கூட்டமைப்பு) புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் போனஸ் ஆசனம் ஒன்றின் மூலம் தமது பிரதிநிதித்துவத்தை தக்கவைத்திருக்கிறது. இவ்வமைப்பு சார்பாக மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்ட ஐய்யூப் அஸ்மின் போனஸ் ஆசனத்தின் மூலம் வடமாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


தேர்தல் குறித்தும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைமையிலான அரசியல் கூட்டின் (னி PMGG LED ALLIANCE) ஊடகப் பேச்சாளரும் நீதிக்கும் சமாதானத்திற்குமான முன்னணியின் தலைவருமான அஷ்ஷெய்க் நஜா முஹம்மத் அவர்களுடனான நேர்காணலை வாசகர்களோடு பகிர்ந்துகொள்கிறோம்.
எங்கள் தேசம்: யுத்த முடிவுக்குப் பின்னரான சமாதான சூழலில் பல மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. குறிப்பாக, தமிழ், முஸ்லிம் மக்கள் செறிவாக வாழும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து களமிறங்காத நீங்கள் வட மாகாண சபைத் தேர்தலில் குதித்ததன் பின்னணி என்ன?
Najah mohamed in UK001நஜா முஹம்மத்: நாட்டின் கடந்த மூன்று தசாப்த யுத்த காலத்தில் இனங்களுக்கிடையேயான உறவில் பாரிய விரிசல் ஏற்பட்டிருந்தது. குறிப்பாக வடக்குகிழக்கில் மிகவும் ஒற்றுமையுடன் வாழ்ந்த தமிழ் முஸ்லிம் உறவு மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தது. யுத்தத்துக்குப் பின்னரான கிழக்கு மாகாண சபைத் தேர்தல் காலத்தில் இந்த தமிழ் முஸ்லிம் உறவை மீண்டும் கட்டியெழுப்பும் நல்லதொரு வாய்ப்புக் கிட்டியது. குறிப்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் முஸ்லிம் காங்கிஷஸ் இணைந்து ஆட்சியமைத்து அரசியல் ஊடாக இவ்வுறவை கட்டியெழுப்பும் முழு சந்தர்ப்பமும் வாய்த்தது. ஆனால் துரதிஷ்டவசமாக அது கை நழுவிப்போனது.
இந்தப் பின்னணியிலான மீண்டுமொரு சந்தர்ப்பமே வடக்கு மாகாண சபைத் தேர்தல். எனவே தமிழ்முஸ்லிம் உறவைக் கட்டி யெழுப்பும் ஆரம்ப புள்ளியாக நாம் வடக்கு மாகாண சபையை பயன்படுத்த முடிவு செய்தோம்.
தேவேளை தனிநாட்டுக் கோரிக்கையுடன் ஆயுத வழிமுறை மூலம் தீர்வுகாண முயற்சித்த ஒரு சமூகம் திலிருந்து விடுபட்டு ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து பயணிக்க முன்வந்த தருணமே வடக்கு தேர்தலாகும். இந்த சந்தர்ப்பத்தில் சிறுபான்மையினரான முஸ்லிம் சமூகமும் அவர்களுடன் கைகோர்த்து தமது அரசியல் பயணத்தை தொடர்வதே காலப் பொருத்தமாகப்பட்டது.
மேலும் யுத்தத்தால் சிதைவுற்று விழுமியங்கள் சிதைந்துபோயுள்ள ஒரு சமூகச் சூழலில் நல்லாட்சி நீதி சமாதானம் இன நல்லுறவு சுட்சம் என்பவற்றைக் கட்டியெழுப்ப வேண்டிய உடநடித் தேவை ஏற்பட்டிருக்கிறது. இத்தருணத்தில் நீதி சமாதானம் சகவாழ்வு பற்றிப் பேசும் இஸ்லாத்தின் வழிகாட்டல்களைப் பெற்ற முஸ்லிம்களின் பங்களிப்பு இன்றியமையாதவையாகும். இதனை அரசியல் ரீதியாக முன்னெடுக்கும் ஆரம்ப புள்ளியாக வடக்கு மாகாண சபைத் தேர்தலை நாம் இனங்கண்டு களத்தில் குதித்தோம்.
எங்கள் தேசம்: தமிழ்த் தேசிய கூட்ட மைப்புடனான புரிந்துணர்வு உடன்படிக்கையின் இலக்குகள் குறித்து சொல்ல முடியுமா?
நஜா முஹம்மத்: சிதைந்துபோயுள்ள தமிழ் முஸ்லிம் உறவை கட்டியெழுப்புவதே எமது உடனடித் தேவையாக இருந்தது. இதற்கு இருசாராரும் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவது என புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் முடிவு எட்டப்பட்டுள்ளது.
மேலும் வடமாகாணத்தில் இருந்து புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் உட்பட அவர்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதில் மையப்போகும் வட மாகாண சபையினதும் தமிழ்த் தேசிய கூட்ட மைப்பினதும் உத்தரவாதம் பங்களிப்பு குறித்தும் புரிந்துணர்வு உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் வடமாகாண முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றத்தை தமிழ்த் தலைமைகள் பகிரங்கமாக ஏற்றுக்கொள்ளாத நிலையை இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் இல்லாமல் செய்திருக்கிறது. முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றத்தை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஏற்றுக்கொண்ட ஒரு வரலாற்றுப் பதிவை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தியிருக்கிறது.
எங்கள் தேசம்: மேற்குறித்த அடைவுகளில் ஏதாவது எட்டப்பட்டுள்ளதா?
நஜா முஹம்மத்: புரிந்துணர்வு உடன் படிக்கையே ஒரு வெற்றியான அடைவு என்றுதான் சொல்ல வேண்டும். வடக்கு முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றத்தை தமிழ்த் தலைமைகள் பகிரங்கமாக ஏற்றுக் கொள்ளாத ஒரு சூழ்நிலையில் தமிழ் மக்களிள் ஏக பிரதிநிதிகளான தமிழ்த் தேசிய கூட்டமைப்பே அதனை ஏற்று அங்கீகரித்திருப்பது முஸ்லிம் சமூகத்துக்கு கிடைத்த முதல் வெற்றியாகும்.
அடுத்தது வடக்கு முஸ்லிம்களை மீள் குடியேறுமாறு அழைப்புவிடுத்ததுடன் அதற்குத் தேவையான அனைத்து உட்கட்டுமான வசதிகளையும் ஏற்படுத்தித்த த.தே.கூ. ஏகமானதாக வாக்குறுதியளித்து தனை தேர்தல் விஞ்ஞாபனத்திலும் இணைத் திருப்பது மற்றுமொரு டைவாகும்.
தேவேளை தேர்தல் காலத்திலும் தமிழ் முஸ்லிம் உறவுக்கான ஒரு பாலமாக தேர்தல் பிரச்சாஷ களத்தை நாம் ஆக்கிக் காட்டியிருக்கிறோம். குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் இன மத வேறுபாடின்றி எமது வெற்றிக்காக தமிழ் முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து உழைத்தார்கள்.
எங்கள் தேசம்: தங்கள் அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ள பிரதிநிதித்துவத்தினூடாக வடமாகாண மக்களுக்கு எதனை செய்ய இருக்கிறீர்கள்?
நஜா முஹம்மத்: ஏற்கனவே நான் கூறிய மூன்று முக்கிய விடயங்களான தமிழ் முஸ்லிம் நல்லுறவு வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் இருப்பு என்பவற்றை வினைத்திறனுடன் முன்னெடுப்பது முதற்பணி.
குறிப்பாக முஸ்லிம் சமூகத்துக்கும் பொதுவாக நாட்டிலும் நல்லாட்சி விழுமியங்களை அடிப்படையாகக்கொண்ட மாற்று அரசியல் ஒன்றை நிலைநிறுத்த பாடுபடுவோம்.
அரசியல் ரீதியாக நம்பிக்கை இழந்திருக்கும் சமூகத்துக்கு எமது முன்மாதிரியான நம்பிக்கை மிகு நல்லாட்சியை செயலுருப் படுத்தி ந்நம்பிக்கையை ஏற்படுத்த இது நல்ல சந்தர்ப்பமாகும்.
வடமாகாணத்திலுள்ள சகல இன மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றை நிவர்த்திக்க முடியுமான அனைத்து சக்திகளையும் பயன்படுத்த உள்ளோம்.
மேலும் வடமாகாண சபையின் சிறந்த நிருவாகத்துக்கும் நல்லாட்சிப் பெறுமானங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதற்கும் எமது பிரதிநிதித்துவம் அர்ப்பணத்துடன் செயற்படும்.
எங்கள் தேசம்: பல சவால்களுக்கு மத்தியில் இயங்கவிருக்கும் வடக்கு மாகாண சபையில் ஒரே ஒரு பிரதிநிதியூடாக இத்தனை பாரிய பணிகளை முன்னெடுப்பதன் சாத்தியப்பாடு எப்படி உள்ளது?
நஜா முஹம்மத்: எமது பிரதிநிதியான அஷ்ஷெய்க் ஐயூப் ஸ்மின் பல ஆளுமைகளைக் கொண்டவர்.கல்வித்தரத்திலும் தகமை பெற்றவர் யாழ்ப்பாணத்திலிருந்து பலவந்தமாக  வெளியேற்றப்பட்ட முஸ்லிம் களின் வலியை நன்கு அனுபவித்தவர். பல்வேறு சமூகப் பணிகளில் அனுபவம் பெற்றவர். மாகாண சபை அதிகாரத்தைப் பயன்படுத்தி சேவைகளை செய்யும் ஆற்றல் வருக்கிருக்கிறது.
எனினும் அவர் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைமையிலான அரசியல் கூட்டின் பிரதிநிதியாகவே செயற்படுவார்.அவருக்கு பக்கபலமாக இருந்து செயற் படக்கூடிய செயலணி ஒன்று உருவாக்கப்படும். பலமிக்க அந்த செயலணி அவருக்கு பக்கபலமாக இருந்து செயற்படும்.
வடமாகாணத்தில் செய்யப்பட வேண்டிய பணிகளை டையாளங்கண்டு அவற்றுக்கு ஆலோசனை வழங்கி முன்நகர்த்தி செல்லும் பாரிய பணிகளை இந்த செயலணி மேற்கொள்ளும்.
அஸ்மின் அவர்கள் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்டாலும் வடமாகாணத்தின் 5 மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தியே தமது சேவையை வழங்குவார். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்துக்குமான செயற்குழுக்கள் நியமிக்கப்பட்டு அந்த செயற்குழுக்களின் ஆலோசனைகளுடன் மக்களின் பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டு உரிய தீர்வுகள் பெற்றுக் கொடுக்கப்படும்.
எங்கள் தேசம்: மாற்று அசியல் கொள்கையை முன்னெடுத்த நீங்கள் பிற கட்சிகள் வேட்பாளர்களிலிருந்து தேர்தல் காலத்தில் எவ்வாறு வேறுபட்டு செயற்பட்டீர்கள்.
நஜா முஹம்மத்: வடக்கு மாகாண சபைத் தேர்தல் பல அனுபவங்களையும் படிப்பினைகளையும் தந்திருக்கிறது.முன்னர் அறிமுகமற்ற ஒருவரால் எந்தவொரு போஸ்டரும் கட்டவுட்டுகளும் இல்லாமல் மக்களை நேரடியாக அணுகுவதன் மூலம் மிகக் குறுகிய காலத்திற்குள் கணிசமான வாக்குகளை பெற முடிந்துள்ளது. போஸ்டர்கள் ஒட்டுவது தேர்தல் விதி முறைகளை மீறுகின்ற செயல் மாத்திரமன்றி அது வீண்செலவை ஏற்படுத்துவதுடன் சூழலையும் மாசுபடுத்தி பிறரது உரிமைகளையும் மீறச் செய்கிறது. இவற்றை முற்றாக தவிர்த்து முன்னுதாரணமாக செயற்பட்டிருக்கிறோம்.
குறிப்பாக தற்போது முஸ்லிம் அசியல் பிரதேச வாதம் என்ற சாக்கடைக்குள் ஊறிப்போய் உள்ளது. பிரதேசவாதம் பேசாமல் அசியல் செய்யமுடியாது என்ற தோரணையிலேயே அரசியல்வாதிகள் செயற்படுகின்றனர்.
ஆனால், நல்லாட்சி விழுமியங்களையும் சிறந்த கொள்கைகளையும் சுமந்து செல்கின்றபோது இனம் மதம் பிரதேசம் போன்றன செல்வாக்கு இழந்துபோவதை நாங்கள் கண்டுகொண்டோம். எமது வேட்பாளர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்.
ஆனால் அவர் மன்னாரிலேயே போட்டியிட்டார். தேவேளை மன்னார் மாவட்டத்துக்கு பிரசாரத்துக்காக சென்ற நல் ஷலாட்சிக்கான மக்கள் இயக்கத்தினதும் நீதிக்கும் சமாதானத்துக்குமான முன்னணியினதும் உறுப்பினர்கள் அனைவரும் மன்னார் மாவட்டத்துக்கும் சிலர் வடமாகாணத்துக்கு வெளியிலிருந்தே சென்றிருந்தனர். எனினும் நல்லாட்சி விழுமிய செய்திகளை சுமந்து சென்ற எங்களை மன்னார் மாவட்டத்தை சேர்ந்த அனைத்தின மக்களும் வரவேற்றதுடன் பக்க பலமாக இருந்து ஆதரவளித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
எங்கள் தேசம்: வடமாகாணத்தில் பிரதி நிதித்துவத்தை பெற்றிருக்கின்ற நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைமையிலான உங்கள் அரசியல் கூட்டின் அடுத்தகட்ட அரசியல் முன்னெடுப்பு எப்படி இருக்கும்.
நஜா முஹம்மத்: நல்லாட்சியை அடிப்படையாகக்கொண்ட மாற்று அரசியல் ஒன்றை சமூகம் எதிர்பார்த்திருக்கின்றது. அதற்கான வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் பரவலாக இருப்பதை அறிய முடிகிறது. எனவே முஸ்லிம் சமூகத்திலும் பொதுவாக நாட்டிலும் எமது அரசியல் பணிகளை விஸ்தரிக்க உள்ளோம். அனைத்து மாகாணங்களிலும் தமது வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு நல்லாட்சிக்கான மக்கள் இயக்கமும் நீதிக்கும் சமாதானத்திற்குமான முன்னணியும் தொடர்ந்து செயற்படும். உயர் விழுமியங்களை அடிப்படையாகக்கொண்ட கொள்கைகளையும் கோட்பாடுகளையும் மையமாகக் கொண்டு அரசியலை முன்னெடுக்க விரும்பும் இன மத பேதங்கள் கடந்த மனித நேயத்தையும் சமூக நீதியையும் முன்னிலைப்படுத்தும் எந்த வொருமைப்புடனும் இணைந்து எமது அரசியல் பணியை முன்னெடுக்க தயாராக உள்ளோம்.
நேர்காணல்: பஷீர் அலி- ‘எங்கள் தேசம்’ பத்திரிகை