Saturday, July 27, 2013

பஷீர் ஷேகு தாவுத் அரசியல் பீட கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் உயர்பீடம் நேற்று முன்தினமிரவு கொழும்பிலுள்ள அதன் தலைமையகமான தாருல் ஸலாமில் கூடியபோது அந்தக் கூட்டத்தில் அமைச்சரும் கட்சினயின் தவிசாளருமான பஷீர் ஷேகு தாவும் கலந்து கொள்ளவில்லை
என தெரிய வந்துள்ளது. இதேவேளை, எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல்களின் போது தனித்து போட்டியிடுவது என்ற தீர்மானம் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.ஆகக்குறைந்தது வடமாகாண சபைத் தேர்தலில் மட்டுமேனும் இணைந்தே போட்டியிட வேண்டுமென அரசு தரப்பால் விடுக்கப்பட்டிருந்த கோரிக்கை முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் உயர்பீட கூட்டத்தில் முற்றாக
நிராகரிக்கப்பட்டதாகவும் எவரின் அழுத்தங்களுக்கும் உட்படாது தனித்தே போட்டியிடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டதாகவும் நம்பகமான வட்டாரங்க் தெரிவித்தன.இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் வடமாகாண சபைத் தேர்தலில் தனது கட்சியை அரசுடன் இணைந்து போட்டியிட மேற்கொண்டுள்ள முயற்சிகள் தொடர்பிலும் கட்சியின் அரசியல் பீடக் கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.குறித்த சிரேஷ்ட உறுப்பினர் வட பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் முக்கியஸ்தர்கள் சிலரை தனது கொழும்பிலுள்ள வீட்டுக்கு அழைத்து அரசின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவரின் முன்னிலையில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியதாகவும் வடக்கு முஸ்லிம்கள் 250 பேருக்கு சமுர்த்தி நியமனம் வழங்குவதாக உறுதியளித்திருந்தார் என்றும் கூறப்படுகிறது. முஸ்லிம் காங்கிரஸ் வடக்கில் தனித்து போட்டியிடும் தீர்மானத்தை மாற்றி அரசுடன் இணைந்து போட்டியிடுவதற்கான அழுத்தங்களை வட பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் முக்கியஸ்தர்கள முஸ்லிம்கள் காங்கிரஸ் தலைமைக்கு கொடுக்க வேண்டுமென்று இந்த சிரேஷ்ட உறுப்பினர் வேண்டுகோள் விடுத்திருந்தார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சர் ஹக்கீம் கேட்டு அரசு கொடுப்பதனை விட தான் அரசிடம் கேட்பதன் மூலம் அதிகமாகவே கிடைக்கு என்றும் இந்தச் சிரேஷ்ட உறுப்பினர் வட பகுதி முஸ்லிம் முக்கியஸ்தர்களிடம் தெரிவித்தார் என்றும் கூறப்படுகிறது.இவ்வாறானதொரு காய்நகர்த்தல் இடம்பெறுவதனை அறிந்து கொண்ட முஸ்லிம் காங்கிரஸின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹஸனலி, இதனுடன் தொடர்புடைய தனது கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரைத் தொடர்பு கொண்டு இது குறித்து வினவியபோது, வடபகுதியைச் சேர்ந்த சில  முஸ்லிம் முக்கியஸ்தர்கள் தன்னைச் சந்திக்க விரும்புவதாகவும் அதன் காரமணாகவே தான் இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இருப்பினும் தான் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என்றும் கூறியுள்ளார். இருப்பினும் குறித்த கூட்ட சிரேஷ்ட உறுப்பினர் தலைமையிலேயே கொழும்பில் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் அரசின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவரும் கலந்து கொண்டுள்ளார்.