Wednesday, October 31, 2012

வடக்கின் முதலமைச்சர் வேட்பாளர் டக்ளஸா? கே.பி.யா? அரச தரப்புக்குள் இழுபறி!

வட மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது தொடர்பில் அரசாங்கத்திற்குள் பனிப்போர் ஏற்பட்டுள்ளதாக நம்ப தகுந்த தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச ஆலோசகர் குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பியை வட மாகாணத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்க வேண்டுமென அரசின் முக்கியமான சிரேஷ்ட உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேசமயம் ஈ.பி.டி.பி. தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவை முதலமைச்சர் வேட்பாளராக ஆளுங்கட்சி நியமிக்க வேண்டுமென மற்றுமொரு சாரார் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த இருவரும் மாகாண சபைத் தேர்தலைக் குறிவைத்து காய்களை நகர்த்தி வருவதால் ஆளுங்கட்சிக்குள் இது விடயத்தில் கடும் பனிப்போர் உருவாகியுள்ளது.
தேர்தல் களத்தில் இறங்கும் முதற்கட்ட வேலையாகவே கடந்த வாரம் முதல் கே.பி. மக்களுடன் நெருங்கும் நடவடிக்கைகளில் இறங்கி வருவதாக அரசாங்கத்தின் உயர் மட்டத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் பின்னணி காரணமாகவே கே.பி. எதுவித குற்றமற்றவர் என அரசின் முக்கிய பிரமுகர்கள் தெரிவிக்க ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.