Wednesday, October 31, 2012

மகிழ்ச்சியான வாழ்வு செயற்றிட்டம்!.

வட மாகாண பாடசாலைகளில் வாழ்க்கைத் திறன் விழுமியக் கல்வியை மேம்படுத்தும் வகையில் மகிழ்ச்சியான வாழ்வு செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்த வகையில் மன்னார் மாவட்டத்திலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரவதாக மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.சியான் தெரிவித்தார்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்டு மனச்சோர்வுடைய மாணவர்களை அதிலிருந்து மீட்டு அனுபவ ரீதியாக தமது தனித்துவத்தைப் பேனவதற்குரிய வகையில் தாமே தமது ஆளுமையை வளர்த்தெடுத்துக் கொள்வதற்கான மனப்பாங்கினை உயர்த்துவதற்கும் சமூகத்தில் ஒன்று சேர்ந்து வாழ வழிகாட்டுவதற்குமான வாழ்க்கைத்திறன் விழுமியங்களை மேம்படுத்துமுகமாகவே மேற்படிச் செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார்.