அதே வேளை இந்த தீ வைப்பு சம்பவத்துடன் முல்லிக்குளம் கடற்படையினர் தொடர்புபட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் பொலிஸாரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.சுமார் 50 பேர் வரையில் இன்று பொலீஸாரிடம் தமது வாக்கு மூலங்களை கொடுத்ததாக பிரதேச வாசியொருவர் தெரிவித்தார்.
பிரதேசத்திற்கு பொறுப்பான கிராம அதிகாரியின் உதவியுடன்,பொலீஸார் சேத விபரங்களை பெற்றுக் கொண்டுள்ளனர்.அதே வேளை தீ சம்பவத்தால் தமது குடிசைகளை இழந்துள்ள குடும்பங்களின் விபரங்களை மன்னார் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் அதிகாரி பெற்றுள்ளதாக முசலி பிரதேச செயலக அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இதே வேளை நாளை காலை பாதிப்புக்குள்ளான மக்களுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்கு வன்னி பிராந்திய இரானுவ கட்டளை அதிகாரி வருகைத் தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் இன்று வழமை போன்று போக்குவரத்து சேவைகள் இடம் பெற்றதாகவும்,புத்தளம் -மன்னாருக்கான பயணிகள் பேரூந்து சேவைகளில் எவ்வித தடங்களும் ஏற்பட்டிருக்கவில்லையென்று பயணிக்ள சிலர் தெரிவித்துள்ளனர்.