Monday, July 23, 2012

பலஸ்தீனர்களுக்கு விசா இல்லாமல் எகிப்து செல்ல அனுமதி..!

எவ்வித ஆவணங்களும் இல்லாமல் வருகை தரும் பலஸ்தீன் மக்கள் எகிப்தில் நுழையவும், தங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திங்கள் கிழமை காலை முதலே விமான நிலயங்களிலும் இதர இடங்களிலும் பலஸ்தீன் மக்கள் விசா இல்லாமலேயே நுழைய துவங்கியுள்ளனர். கெய்ரோ ஏர்போர்டின் பாதுகாப்பு பிரிவு இத்தகவலை தெரிவித்துள்ளது. வெறும் பாஸ்போர்ட் மட்டுமே பரிசோதித்து அதில் ஸ்டாம்ப் செய்யப்படுகிறது.
விசா பிரச்சனையின் காரணமாக முன்பு சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்களும் புதிய சட்டத்தின் அடிப்படையில் விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர்.