Thursday, July 26, 2012

சிரிய இராணுவத்தில் தொடரும் பிளவுகள்

பிரிகேடியர் தரத்திலான இரண்டு இராணுவ உயர் அதிகாரிகள் தனது நாட்டுக்கு வந்திருப்பதாக துருக்கிய துாதுவராலயத்தின் ராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார். இவர்களோடு துருக்கி வந்தடைந்த இராணுவ உயர் அதிகாரிகளின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளன.
சிரியாவின் பஷ்ஷார் அஸதிற்கெதிராக 2011 மார்ச்சில் ஆரம்பிக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து சிரிய இராணுவத்திலிருந்து நுாற்றுக்கணக்கான உயர் இராணுவ அதிகாரிகள் துருக்கி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மறுபுறம் துருக்கியில் சுமார் 44 ஆயிரம் பேர் வரையிலான சிரிய பிரஜைகள் அகதிகளாக துருக்கி வந்தடைந்து அங்கு முகாம்களில் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.