இறுதி வரை கலாநிதி முஹம்மத் முர்ஸிக்காக போராடுவது எம் மீது கடமையாகும் என்று எகிப்து அல் அஸ்ஹர் பல்கலையைப் பிரதிநிதிதுத்துவப்படுத்தும் பல முன்னணி இஸ்லாமிய அறிஞர்கள் கபன் ஆடையை வைத்து உறுதி பிரமாணம் எடுத்து இக்கருத்தைத் தெரிவித்துள்ளார்கள்.
இன்று வெள்ளிக்கிழமை (05.07.2013) எகிப்து அல் அஸ்ஹர் பல்கலையைப் பிரதிநிதிதுத்துவப்படுத்தும் பல முன்னணி இஸ்லாமிய அறிஞர்கள் கலாநிதி முஹம்மத் முர்ஸிக்கு ஆதரவாக பத்திரிகையாளர் மாநாடு ஒன்றை நடத்தியுள்ளனர். அம்மாநாட்டிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
இப்பத்திரிகயையாளர் மாநாட்டின்போது அல் அஸ்ஹர் பல்கலைக்கழக முன்னணி இஸ்லாமிய அறிஞர்கள் தங்களது கபன் ஆடையை ஏந்தியபடி அம்மாநாட்டில் வைத்து உறுதி பிரமாணம் எடுத்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.