சர்வதேச நீதிபதிகளின் உப தலைவரும், சட்ட மேதையும், உலக நாடுகளின் உள்ள சர்வதேச பல்கலைக்கழகங்களின் வருகை சட்ட விரிவுரையாளரும் 50க்கும் மேற்பட்ட சட்ட நூல்களை எழுதியவருமான நீதியரசர் சீ.ஜீ.வீரமந்திரி அவர்களால் எழுதப்பட்ட ‘சர்வதேச பார்வையில் இஸ்லாமிய சட்டவியல்’ ஆங்கில மொழி முலமான நூலின் சிங்கள மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டு விழா பி.எம். ஜ.சி. எச். இல் நடைபெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லீம் மீடியா போரத்தின் அனுசரனையில் வெளிநாட்டு அமைச்சின் முன்னாள் செயலாளர் எச்.எம். ஜி.எஸ் பள்ளியக்கார தலைமையில் நடைபெற்ற
இந்நிகழ்வில் என்.எம் அமீன், நீதியரசர் வீரமந்திரி, ஜாமிஆ நளிமியா கலாபீட பணிப்பாளர் கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி, சட்டமா அதிபர் சரத் பாளித்த பெர்ணான்டோ, நூலின் மொழிபெயர்ப்பாளர் எஸ்.எ.சி.எம் சுகையில், கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியை சாவித்திரி குணசேகர ஆகியோர் உரைநிகழ்த்தினார்கள்.
இங்கு உரையாற்றிய நீதியரசர் வீரமந்திரி;
“இஸ்லாம் ஒரு சீரிய வாழ்க்கை முறையாகும். இம்முறைகளை கட்டாயம் வளர்ந்து வரும் மாணவ சமுகம், சட்ட மாணவர்கள், கல்விச் சமுகம், ஏனையோரும் அறிந்து கொள்ள வேண்டும்.
இஸ்லாமிய கலை பாண்பாட்டு நீதி, சட்டம், முஹம்மத் நபி அவர்களின் சீரான வாழ்க்கை முறைகளை தெரிந்து கொள்ள வேண்டும். அதேபோன்று தற்காலத்தில் இலங்கையில் மிகவும் தேவைப்படானதொரு கால கட்டத்தில் இந்த இஸ்லாமிய சட்டவியல் சிங்கள மொழி முலமான நூல் வெளி வந்துள்ளது.
அதேபோன்று முஸ்லீம்களும் ஏனைய மதங்களின் வாழ்க்கை முறைகள் கலை பண்பாட்டு மதங்களை தெரிந்து கொள்ளல் வேண்டும்.
முஹம்மத நபி (ஸல்) அவர்கள் சீனதேசம் சென்றாலும் சீர்கல்வியைத் தேடி கற்க வேண்டும் என சொல்லியிருக்கின்றார்.
இஸ்லாமிய கற்கை சம்பந்தமான 800க்கும் அதிகமான (பகுதிகள்) கொண்ட நூல்கள் உலக நாடுகளின் நூலகங்களில் உள்ளன. லண்டன் ஒகஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கூட 200 வலியும் கொண்ட நூலகமே உள்ளது.
ஆகவே இஸ்லாம் பற்றிய பாரிய அறிவு விருத்திகளுக்கு இந்நூல்களை நாம் தேடி கற்றுக் கொள்ள வேண்டும்.
எனது ஆங்கில மொழி முலமான நூலை சர்வதேச சட்ட மாணவர்கள் கற்கின்றார்கள் ஆனால் இலங்கையில் உள்ள சட்டம் மற்றும் பல்கலைக்கழகம் பயிலுகின்ற மாணவர்களுக்கு 2 வீதமே இஸ்லாமிய சட்டம் பற்றிய அறிவு போதிக்கப்படுகின்றன. ஆனால் இஸ்லாம் மற்றும் ஷரிஆ சட்டங்கள் பற்றி எமது நாட்டில் உள்ள சகலரும் நிறைய தெரிந்து கொள்ளல் வேண்டும்” என தெரிவித்தார்.
இந்த நூலை முன்னாள் குவைத் தூதுவர் எஸ்.ஏ.சி.எம் சுகையில் சிங்கள மொழி முலம் மொழிபெயர்ப்புச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.