Wednesday, October 31, 2012

கருப்பு ஒக்டோபர் 22′ நினைவு கூறப்படுகிறது

வடமாகாண முஸ்லிம்கள் வடமாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு இந்த ஒக்டோபர் மாதத்துடன் 22 ஆண்டுகள் பூர்த்தியாகின்றது.
இந்த சம்பவம் ஆண்டுதோறும் வடமாகாண முஸ்லிம்களால் நினைவு கூறப்படுகிறது.
இந்த ஆண்டும் ‘கருப்பு ஒக்டோபர்’ நினைவுகூரும் நிகழ்வுகள் கடந்த 26,27,28, 29 ஆம் திகதிகளிலும் இடம்பெற்றது. மற்றும் இன்றும் நாளையும் (30,31) கொழும்பு, புத்தளம், மன்னார், யாழ்பாணம் ஆகிய பிரதேசங்களில் இடம்பெறுகின்றது.
இந்த ”கருப்பு ஒக்டோபர் 2012” நிகழ்வுகளின் கருப்பொருளாக ,
1. வடமாகாண முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் வெற்றிபெற  அரசு விசேட சட்ட மூலம் ஒன்றில் ஊடாக  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தல்.

2. தமிழ் தேசிய கூட்டமைப்பு முஸ்லிம்களின் மீள்குடியேற்றதுக்கு ஒத்துழைப்புகளை வழங்காவிட்டாலும் தடைகளை ஏற்படுத்தாது இருக்கவேண்டும் என்று வலியுறுத்தல்.
3. வடமாகாண முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றத்தின் போது மிகப்பெரிய கொள்ளை சம்பவமொன்றும் இடம் பெற்றுள்ளது. அது வரலாற்றில் சரிவர பதிவு செய்யப்படவேண்டும் என்பதை வலியுறுத்தல்.
4. தமிழ், முஸ்லிம் சமூகங்கள் மத்தியில் மீண்டும் புரிந்துணர்வையும், சகவாழ்வையும் ஊக்குவித்தலை வலியுறுத்தல் ஆகியவற்றை கொண்டிருந்தது.
மேற்கண்டவைகளை கருப்பொருளாக கொண்டு சொற்பொழிவு, கலந்துரையாடல், விழிப்புணர்வு போஸ்டர்கள் ஒட்டல் ஆகிய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை சிறிலங்கா முஸ்லிம் வாலிபர் போரம் மேற்கொண்டது. சிறிலங்கா முஸ்லிம் வாலிபர் போரம் கடந்த ஆண்டுகளிலும் ”கருப்பு ஒக்டோபரை நினைவுகூரும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது .
இது தொடர்பாக இந்த ஆண்டும்  பல்கலைகழக தமிழ், முஸ்லிம் மாணவர்கள்  மத்தியிலான கலந்துரையாடம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
thanks meelpaarvai