Wednesday, October 31, 2012

20 பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள், இது வரையில் எவரும் கைது செய்யப்படவில்லை !

தம்புள்ளையில் தொடங்கி இது வரை 20 பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் நடாத்தப்பட்டுள்ளது. இது வரையில் எவரும் கைது செய்யப்படவும் இல்லை, விசாரணை செய்யப்படவும் இல்லை. அரசாங்கத்தினுள் இருக்கும் அடிப்படைவாத சகதி கள் நாட்டில் மீண்டும் இனக்கலவரத்தை ஏற்படுத்தும் சதியை முன்னெடுக்கின்றன அதன் ஒரு அங்கமே பள்ளிவாசல்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் .என மேல்மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார் .
நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இதனை அவர் தெரிவித்தார் .

 
அனைத்து மதங்களும் தமது மதக் கடமையை சுதந்திரமாக செய்யமுடியும் என்று அரசியல்யாப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அரசியல் அமைப்பு மீறப்படுகிறது . இன்று தம்மை தேசப் பற்றாளர்களாக அடையாளப் படுத்திக் கொண்டு அரசாங்கத்துக்குள் இருக்கும் அடிப்படைவாதிகள் நாட்டில் மீண்டும் இனக்கலவரத்தை தூண்ட முயற்சிக்கின்றனர் .
ஆனால் இதனைத் தடுக்க அரசாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. அநுராதபுரத்தில் தீவைக்கப்பட்ட பள்ளிவாசல் மீண்டும் நிர்மாணித்து கொடுக்கப்படும் என்று தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர் தெரிவித்தார். இப் பள்ளிவாசலை கட்டியெழுப்ப முஸ்லிம்களால் முடியும். ஆனால் அதுவல்ல பிரச்சினை. இதற்கு தீவைதவர்கள் யார் ? என்று கண்டுபிடிக்கப்படவேண்டும் ,சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும் என்பதுதான் முக்கியம் .
இனவன்முறையை தூண்டி இலங்கையை பொஸ்னியா, சூடானாக மாற்ற சிலர் முயற்சிகிறார்கள் என்றும் மேல்மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.