(சுபுன் டயஸ், பத்மகுமாரி)
கற்பிட்டி கண்டல்குழி சிவில் பாதுகாப்பு படை முகாமுக்கு அருகிலுள்ள கடற்கரையில் இன்று குண்டொன்று வெடித்ததால் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 சிறார்கள் காயமடைந்துள்ளனர்.
கைக்குண்டொன்றை கண்டுடெடுத்து அதை அழுத்தியபோது இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என நம்பப்படுகிறது.
17 வயதான சிறுவனொருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்தவர்கள் கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அவர்களில் இருவர் புத்தளம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். அதன்பின் 12 வயதான சிறுவன் புத்தளம் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். (படங்கள்: ஹிரான் பிரியங்கர ஜயசிங்க, அப்துல்லாஹ், எஸ். எம். மும்தாஜ், எம்.என்.எம். ஹிஜாஸ் )