Tuesday, July 31, 2012

முஸ்லிம் எயிட் ஸ்ரீலங்காவிற்கு இரு விருதுகள்

ஸ்ரீலங்கா இஸ்லாமிய வங்கி தொழிலும் நிதியும் நான்காவது மாநாட்டில் முஸ்லிம் எயிட் ஸ்ரீலங்கா இரண்டு விருதுகளை பெற்றுள்ளது.

அனைத்தையும் அடக்கிய நிதி சேவைகளை ஏழைகளுக்கு வழங்கியமைக்காக 'சமூக மேம்பாடு விருது' மற்றும் 'ஆண்டுக்கான இஸ்லாமிய நிதி சேவை' ஆகிய இரு விருதுகளுமே முஸ்லிம் எயிட் ஸ்ரீலங்காவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு விருதுகளையும் முஸ்லிம் எயிட் ஸ்ரீலங்காவின் வதிவிட பிரதிநிதி பைஸர் கான் பெற்றுக்கொண்டார்.

ஏழை மக்களின் பல்வேறுபட்ட தேவைகளுக்கு பொருத்தமான பல நிதி சேவைகளை முஸ்லிம் எயிட் ஸ்ரீலங்கா வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.