Monday, February 15, 2016

தாமதிக்காமல் தேசியப்பட்டியல் எம் பீக்கள் நியமிக்கப் படுதல் நல்லது

இன்னும் தாமதிக்காமல் தேசியப்பட்டியல் எம் பீக்கள் நியமிக்கப் படுதல் நல்லது, மக்கள் பிரதிநிதிகள் குறிப்பிட்டஒரு மாவட்டத்தில் அல்லது தேசிய அளவில் பணிகளை ஆரம்பிக்கலாம் அல்லவா..?

ஏற்கனவே தேசியப்பட்டியல் நியமனம் பெற்றவர்கள், மற்றும் பிரதேசங்களுக்கு மீண்டும் சந்தர்ப்பங்களை வழங்குவது நியாயம் இல்லை என்பதனை அவர்களது மனச் சாட்சி ஏற்றுக்கொள்ளும்.



அண்மையில் அமானிதம் காத்து பதவி விலகிய டாக்டர் ஹபீஸ் அவர்கள் நான்கு மாதங்களும் பாராளுமனறத்தில் செயல்பட்டவிதம் பாராட்டத்தக்கது, தொடர்ந்தும் முஸ்லிம் காங்கிராஸ் பாராளுமன்றக் குழுவினரின் பிரதான இணைப்பாளராக அவர் பாராளுமன்றத்தின் உள்ளும் புறமும் செயற்படுவதற்குரிய விதத்தில் ஒருஏற்பாட்டினைச் செய்வது சிறந்ததாக இருக்கும்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹபீஸ் விலகுவதற்கு முன்னர் எழுப்பியிருந்த வாய்மூல வினாக்கள் ஒழுங்குப் பத்திரத்தில் இருந்து நீக்கப்ப டினும் மற்றொரு உறுப்பினர்  அவற்றை மீண்டும் முறையாக எழுப்புவதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப் படல் வேண்டும்.

அவரது நீண்டகால ஊடக அனுபவம், வயது, சமூக அக்கறை, சன்மார்க்கப்பற்று என்பவற்றை கருத்தில் கொண்டு வெறுமனே ஒரு ஊடக செயலாளர் என்ற அளவில் அவரது பணிகளை மட்டுப்படுத்தாது வேறு ஏதேனும் தகுதி வாய்ந்த அரசியல் இராஜதந்திர முக்கியத்துவமுள்ள பதவி ஒன்று வழங்கப்படுவது தேசத்திற்கும் சமூகத்திற்கும் நன்மை பயக்கும்என கருதுகின்றேன்.

சும்மா ஒரு அபிப்பிராயம் மட்டுமே...
ஒரு முறை சொன்னா ஒரே முறை சொன்ன மாதிரி தான்..