Sunday, January 19, 2014

கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கும் இலங்கை கடற்படையினருக்குமிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

newsஇலங்கை கடற்படையினருக்கு முகாமைத்துவ பயிற்ச்சி வழங்குவது தொடர்பாக கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கும் இலங்கை கடற்படையினருக்குமிடையே புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
 
கிழக்குப் பல்கலைக்கழத்தின் சார்பில் பல்கலைக்கழக துணைவேந்தர் கலாநிதி கி.கோபிந்தராஜாவும் இலங்கை கடற்படை சார்பில் பிரிவு பணிப்பாளர் நாயகம் அட்மிறல் எம்.யு.கே.வி.பண்டார ஆகியோர்  புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
 
கிழக்குப் பல்கலைக்கழத்தின் மட்டக்களப்பு வந்தாறு மூலை வளாகத்தில் இந்த ஒப்பந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
 
முகாமைத்துவம் சம்பந்தமாக கற்கை நெறிக்கு கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்களை வழங்குதல் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சியை பெற்றுக் கொடுத்தல் போன்றன ஒப்பந்தத்தில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
அடுத்த இரண்டு வருடங்களுக்கு செயற்படுத்ததக்கதாக இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ள போதிலும் இரு தரப்பு உடன்படிக்கை அமைவாக நீண்ட கால செயற்பாடாக அமையவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.