நாம் வெறும் வரலாற்றை மட்டும் வாசிக்கக் கூடிய சமூகம் ஆனால் இஹ்வான்கள் வரலாற்றைபடைக்கின்றனர். நாம் வெறும் சந்தர்பவாதிகளாக இருக்கின்றோம் ஆனால் அவர்கள்மற்றவர்களுக்காக வாழ்கின்றவர்கள்.
"அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பத்திற்குரிய மனிதன் பிறருக்குப் பயனுள்ளவனாவான்"
"அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பத்திற்குரிய மனிதன் பிறருக்குப் பயனுள்ளவனாவான்"
கவலைக்குரிய விடயம் என்னவென்றால் இஹ்வான்களைப் பற்றி அதிகமான முஸ்லிம்களேதவரான கருத்துகளை கொண்டிருப்பதாகும். இவர்கள் அவர்கள் பற்றிய எந்தவொருஅறிமுகமுமின்றி எதிர்கின்றனர் இல்லை இவர்கள் பற்றி புதிதாதக அறிந்து கொள்ளும் சந்தர்பத்தில் " என்ன இன்னுமொரு இயக்கமா.. எங்கடா போகுது எங்கட சமூகம் ” என்று எதிர்கின்றவர்களும் இருக்கின்றனர்.
இன்றைய காலகட்டத்தில் முஸ்லிம் பெயர்களை சுமந்து வெளித்தோற்றத்திற்கு முஸ்லிமாக வாழுகின்றவர்களின் எண்ணிக்கை தான் அதிகம் . அவர்களுக்கு இஸ்லாத்தை கற்கவோ நடைமுறைப்படுத்துவதற்கோ அவர்களுக்கும் அவர்களுடைய நேரம் இடமளிப்பதில்லை. நான் ஒரு ஜமாத்தை பிரநிதித்துவப்படித்தினால் போதும். என்னுடைய பெயர் இந்த பள்ளிவாசல் அங்கத்தவர் பட்டியலில் பெயர் இருந்தால் போதும். என்ற மனோநிலையில் தான் இருக்கின்றார்கள்.
அப்போ யார் இஸ்லாத்தை பரப்புவது ???????
நான் ஏன் பரப்பனும் அதுக்கல்லாம் வேறு ஆள்க இருக்காங்க தானே .. எங்களுக்கு என்ன தெரியும் என்று கூறிக்கொண்டு செல்வத்தின் பின்னால் ஒடிக்கொண்டிருக்கின்றான்.
102:1 أَلْهَاكُمُ التَّكَاثُرُ - செல்வத்தைப பெருக்கும் ஆசை உங்களை (அல்லாஹ்வை விட்டும்) பராக்காக்கி விட்டது
மனிதன் படைக்கப்பட்ட நோக்கத்தை மறந்து வாழ்கின்றான்.
103:3 إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை).